ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம்!!!
திறனாளியான குழந்தைதனை பள்ளி வாசலில் விடுகையில்
எழுந்திடும் எண்ணம் எத்தனைக் கடினம் பிள்ளைகளைத்தயாராக்க!
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
மாற்றுத் திறனாளியான குழந்தைதனை எந்தவித சோர்வும்மின்றி
தாய் புன்னகையுடன் வழியனுப்புகையில்!
வேலைக்காரி வரவில்லையே குப்பையை கொட்ட - முகம்சுலித்திடும்
தன் வீட்டுக்குப்பையைத் தொட.
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
குப்பையைச் சுத்தம் செய்யும் பணியாளன் தான் இழுத்துவரும்
ஊர்தியில் இருந்து தனது காலை உணவுபையை எடுத்துஉணவருந்தும்போது!
மருத்துவ மனையில் நொந்துகொள்வோம்...கூடவரவில்லையேஎன்று
நாற்பதுவயது கூட தாண்டாத நாம்.
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
எழுவதைத் தொட்டும் கலக்கமே இல்லை முகத்தில்
துணிவாக மூதாட்டி மருந்து சீட்டுடன்! தனியாக.
கணவன் மனைவி சண்டை! வாழ்க்கையே வெறுத்தது! இதயமேதுடிக்க மறுக்கிறது! ஆனால்
கைவிட்டு எண்ணும் நாள்தான் மீண்டும் கரங்கள் இணையும்!
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
கைபிடித்தவனை(ளை) இழந்து கலாச்சார வட்டத்திற்குள்
இளமையில் தனிமையில் அவன்(ள்) -வாழ்க்கையில் எதுதுன்பம்!
கற்பமாய் இருக்கிறேன் பக்கத்திலிருந்து பழச்சாருகொடுக்கவில்லையே
கோபமாய் கட்டலில் படுத்துக்கொண்டு.
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
வயிற்றில் குழந்தையுடன் கால்முட்டியிட்டு
தன் கட்டலின் அடியே துடைத்துவரும்பணிபெண்ணைப்பார்த்தபோது!
பணிக்குப் போகும் தாய் குழந்தையை வீட்டில் விட்டுச்செல்லும்போது நொறிங்கிவிடும் மனது.
அங்கே குழந்தை விளையாட்டுபொமைகளோடு பஞ்சுமெத்தையில்.
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
காய்கறி வண்டியில் தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காயாககாய்ந்து கொண்டே
காயைப்பாவையாய் எண்ணி விளியாடியவாறே ஊர்வலம்வரும்குழந்தைதனை பார்க்கையில்!
காரில்ப்ரயாணிக்கும் வேலையிலும் பலமுறை கூறிடுவோம்ஓட்டுனரிடம் பார்த்து கவனமாக
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
கைத்தடியைமட்டும் வைத்துக்கொண்டு நெரிசலானசாலையைகடக்கும்
பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் தன்நம்பிக்கையைப்பார்க்கையில்!
வேலைக்காகப் பிள்ளைகள் வெளியூர் சென்றுவிட்டனர் - அவர்கள் கற்றுக்கொடுத்த
வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும்தான் உரையாடிக்கொள்கிறோம்என்று ஏங்கினோம்.
ஆனால் ஆச்சரியமாய் நின்றது இதயத்துடிப்பு ஒரு நிமிடம் - ஆம்
பிள்ளைகளேயின்றி நான்கு சுவற்றுக்குள் தங்களையேபிள்ளைகளாக
பாவித்து வாழும் தம்பதியினரின் களிப்புதனை காணுகையில்!
இதயமே ஆச்சரியப்படுகிறது நம்மைப்பார்த்து - ஆம்
எதற்குத்தான் ஏங்குகிறாய்?
இல்லாதவனே ஏங்கவில்லை எதுவும்இல்லையென்று!
இப்பொழுது நின்றது துடிப்பு ஒரு நிமிடம் புரிதலோடு
பெருமூச்சுவிட்டு!!!.
கிருஷ்ண ப்ரியா ம
29-10-2018

0 Comments