Subscribe Us

Header Ads

வள்ளலார் காட்டிய வழிபாடு | Vallalar | Thirumurai | sixth

வழிபாடு கட்டுரை


 *வழிபாடு என்றால் என்ன ?*


*உயிர் இனங்களில் மனித குலத்தை தவிர வேறு எந்த ஜீவராசிகளும் கடவுளை நினைப்பதும் இல்லை வேண்டுவதும் இல்லை வழிபாடு செய்வதும் இல்லை.* 


*மனிதன் மட்டும் பல கடவுள்களை மனிதனே படைத்து   அக் கடவுளுக்கான இடங்களை தேர்வு செய்து.* *கோயில்களாகவும்* *ஆலயங்களாகவும்* *மசூதிகளாகவும்*

*பிரமிடுகளாகவும்* மற்றும்

*பல பெயர்களில் பல  கட்டிடங்களை எழுப்பி.உண்மைக்கு புறம்பான கடவுள்களை தோற்றுவித்து* *அக் கடவுள்களுக்கு பல பெயர்கொண்ட தெய்வங்களை சிற்ப சிலைகளாக பல பல உருவங்களாக அருவங்களாக உருவ அருவங்களாக செய்து வைத்து அக் கடவுள்களின் பெயரால் பல பல தத்துவப் பாடல்கள் இயற்றியும் மந்திரங்களை உண்டாக்கியும் அபிஷேகம் ஆராதனைகளும்மற்றும் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.தோத்திரங்களும்  செய்து வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள்*


*மனிதன் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் ஏன்!*


*இவ்வுலகில் தவறான வழிகளில் பொருள் ஈட்டுபவர்களும்.*

*ஒழுக்கம் இல்லாதவர்களும்*. *பல உயிர்களுக்கு பல சமயங்களில் துன்பம் செய்பவர்களும் பல வழிகளில் குற்றம் செய்பவர்களுக்கும் துன்பம் துயரம் அச்சம் பயம் பிணி மரணம் போன்ற தீராத துன்பங்கள் வருகின்றது.* 


*அக் குற்றங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும்  தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கடவுளிடம் சென்று  வேண்டுகிறார்கள் வழிபடுகிறார்கள்*.*மேலும் தன் குடும்பமும் தங்களைச் சார்ந்தவர்கள் மட்டும்  வசதியாகவும் வளமுடனும் வாழ வேண்டும் என்று சுயநல நோக்கத்தோடும் பல வகைகளில் காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்மேலும் கடவுளிடம் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பேரம் பேசுகிறார்கள்.*

*இதுபோலவே  பலநூறு ஆண்டுகளாக கடவுளிடம் வழிபாடாக  எண்ணி வழிபடுகிறார்கள்*.


*எல்லா உயிர் இனங்களும் தோன்றுகின்றன வாழ்க்கையில் ஏற்படும் துன்பம். துயரம்.அச்சம் பயம். பிணி மூப்பு அடைந்து இறுதியாக மரணம் வந்து மாண்டு போகின்றன.* 


*அதேபோல் மனிதனும் பிறக்கிறான் வாழ்க்கையில் துன்பம் துயரம் அச்சம் பயம் நரை திரை பிணி மூப்பு உண்டாகி இறுதியில் உடம்பைவிட்டு  ஆன்மா உயிர் பிரிந்து மரணம் வந்து மாண்டுபோகின்றான்*.


*எல்லா உயிர் இனங்களுக்கும் மரணம் பொதுவானதா ? மரணம் அடைந்தால் உடம்பை விட்டுவிட்டு ஆன்மா உயிர் எங்கே? செல்கிறது.*

*அதே ஆன்மா உயிர் உடம்பிற்குள் எவ்வாறு வந்தது ? மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு எடுக்கின்றதா ? அப்படியே மீண்டும் பிறப்பு எடுத்தாலும் எந்த எந்த ? பிறப்பு எடுக்கின்றது.* *என்ற கேள்வி மனிதனுக்கு மட்டுமே தோன்றியது.* *மேலும் சிந்திப்பது செயல்படுவது தெரிந்து கொள்வது புரிந்து கொள்வது பேசுவது கொடுப்பது.வாங்குவது.சேமிப்பது  போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவும். தெரிந்துகொள்ளவும் அறிவு வழங்கப்பட்டுள்ளது.*


*அதனால் மனிதர்களுக்கு உயர்ந்த அறிவு பெற்றவர்கள்  என்ற பெயர் மனிதர்களால் சூட்டப்பட்டது.* 


*அதிலும் சிறந்த உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களின் ஆன்ம அறிவில் தோன்றியதுதான் கடவுள் கொள்கையாகும*

*ஆன்மாக்களையும் உயிர்களையும் உடம்பையும் மற்றும் பஞ்ச பூத உலகங்களையும்.கிரகங்களையும் படைத்தவர்  ஆதிபகவன் என்றும். கடவுள் என்றும். இறைவன் என்றும்.அல்லா என்றும்.பரமபிதா என்றும் ஆண்டவர் என்றும் பல பல பெயர்கள் பல அறிவாளிகளால்(அருளாளர்களால்) சூட்டப்பட்டதாகும்.*


*மனித குலத்தின் நன்மைக்காகவும்.அடுத்து மனிதன் துன்பம் துயரம் அச்சம் பயம் நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்காக நம்மை படைத்த இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த வழியாகும் என நினைந்துதான் கடவுள் கொள்கையை அருளாளர்கள் உண்டாக்கினார்கள்* *கடவுளால்தான் எல்லா துன்பங்களில் இருந்தும் பாதுகாக்க முடியும். என்ற உண்மையை அறிந்து கொண்டார்கள்*


*அந்த அருளாளர்கள்  ஒரே கடவுள் ஓரே கொள்கையைச்  சொல்லாமல் பலப்பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லியும் பலப்பல கொள்கைகளைச் சொல்லியும் பல பல வழிமுறைகளைச் சொல்லியும் மக்களை பிரித்து வைத்து விட்டார்கள்* 


*விரிக்காமல் சுருக்கமாக சொல்கிறேன்!*


*அதுவே பல மதங்களாக பல சமயங்களாக பல சாதிகளாக மக்களை பிளவுபடுத்தி விட்டன*. *ஏதும் அறியாத அப்பாவி மக்கள் உண்மையான கடவுளைத் தெரிந்து கொள்ள வழித் தெரியாமல் மதங்களைப் படைத்தவர்களையும்.அவர்கள் காட்டிய தத்துவ சிற்பங்களையும். அவர்களது கொள்கைகளையும் கடவுளாக நினைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக  என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*உலகம் முழுவதும் பலவகையான மதங்களும்  சமயங்களுமான பொய்நெறிகள் தோன்றியதால்.* *கடவுளின் உண்மைநெறி எதுவென்று தெரியாததால் மக்கள் இறந்து இறந்து வீண்போய் கொண்டு உள்ளார்கள்.*

*ஆதலால் பொய்நெறியை அகற்றி* *எல்லோரும் நன்மைஅடையும் பொருட்டு ஒரு பொது நெறியை தோற்றுவித்து மக்களைக் காப்பாற்ற வேண்டு என்று* 


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை யோடு வள்ளலாரைத் தேர்வு செய்து (பக்குவ ஆன்மா) இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து உள்ளார்*  


மேலும் ஒருபாடலில் வள்ளலார் தெளிவாகப் பதிவு செய்கிறார் ! 


*அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்*


*சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்*


*இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த*


*உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!*


*உலக மக்கள் சாதி சமய மதங்களில் சிக்கி தவிக்கும் நிலைமையை அகற்றி நல்வழியில் திருத்தி இவ்வுலகிலே  இவ்வாழ்க்கையிலே பரத்தை பெற்று (அருளைப்பெற்று)  மரணத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவரே திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*ஒரேகடவுள் ஒரே வழிபாடு !*


*இயற்கை உண்மையான. இயற்கை விளக்கமான இயற்கை இன்பம் அளிக்கும் ஒரே கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  இவ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளலார்.*


*உலகம் முழுவதும் ஒரே கடவுள்! ஒரே வழிபாடு என்ற கொள்கையை கொண்டு வந்தவர் வள்ளலார்.*


*ஒர்  உடம்பிற்கு ஓர் உயிர்தான் இருக்க முடியும்.அதேபோல் எல்லா உலகத்திற்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்குமுடியும் இருக்க வேண்டும் என அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி புரிய வைத்தவர் வள்ளலார்*


*வள்ளலார் பாடல்!*


*உருவராகியும் அருவினராகியும் உருஅரு வினராயும்

ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர்*


உணர்வின்றி

இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும்

ஐவர்கள் என்றும்

எருவராய் உரைத்து உழல்வது ஏன் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.! 


*எனவும் மேலே கண்ட பாடலில் தெளிவுபடுத்துகிறார்*


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்* *வழிபாட்டு முறையை திருத்தி மாற்றி அமைத்தவர் வள்ளலார்* 


*ஏன் என்றால் ?  உயிர்களுக்கு துன்பம் செய்ததால்தான் நமக்கு துன்பம் வருகிறது.அத் துன்பத்தை ஜீவ காருண்யத்தாலும் உயிர் இரக்கத்தாலும் மட்டுமே போக்கமுடியும்* *வேறுவழியில் நமது துன்பத்தை போக்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை*


*உயிர்கள் மேல் இயற்கையாக அன்பு தயவு கருணை காட்டுபவர்களுக்கு மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்க தயாராக உள்ளார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார்.*


*எங்கே கருணை யியற்கையி னுள்ளன*

*அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே!*( அகவல்)


*ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் ஜீவ காருண்ய வழுபாட்டால் மட்டுமே எல்லாத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் கடவுள் அருளைப் பெறமுடியும்  என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.அதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள் தோற்றுவித்துள்ளார்*


*அதேபோல் கடவுளை வெளியில் தேடவேண்டாம் எல்லா ஆன்மாக்களையும் உயிர்களையும் உடம்பையும் உள் ஒளியாக இருந்து  இயக்கிக்கொண்டு இருப்பவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.* *அவரை உண்மை அன்பால் நேசித்து சத்விசாரம் செய்ய வேண்டும் அதுவே கடவுள் வழிபாடாகும்.*


*அந்த உண்மையை வெளிப்படுத்தவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை 1872 ஆம் ஆண்டு தோற்றுவித்துள்ளார்*  *அங்கே சிலைகள் சார்ந்த உருவ வழிபாடுகள் எதுவும் கிடையாது. ஓளி வழிபாடே உண்மையானது என்பதை வெளிப்படுத்தி காட்டி உள்ளார்*


*அந்த ஒளிவழிபாடு என்பது ஒவ்வொரு ஆன்மாவையும் குறிப்பதாகும்*


*உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!* (அகவல்)


*சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்*

*சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்*

*நித்திய ஞான நிறையமு துண்டனன்*

*நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்!*


*என்னும் அருள் வரிகளில் ஜீவகாருண்ய வல்லபத்தையும்.* *கடவுளின் உண்மையும் உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக  வடலூரில் சத்திய தருமச்சாலையும்.*

*சத்திய ஞானசபையும் தோற்றி வைத்துள்ளார்.*

*மக்கள் வடலூர் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்* .


*பாவம் செய்பவர்களை எமன் என்னும் கூற்றுவன் நேசிக்கிறான்.*


*புண்ணியம் செய்பவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேசிக்கிறார்* 


*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற  தியானம். யோகம்.தவம்.வழிபாடுகள் யாவும் பிரயோசனம் இல்லாத வெற்று மாயா ஜாலங்கள் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்.* 


*ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம இருக்கும் காருண்யம் உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்.அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும்.அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடன் உபசரித்து உபகாரம் செய்யும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்கள் எவரோ அவரே எல்லாம் அறிந்த வித்தகர் என்பதால் அவருடைய உள்ளத்தில் இறைவன் நீங்காத இடம் பெற்று அருளை வாரி வழங்கி அவருடன் கலந்து கொள்வார்* என்பதே இயற்கை உண்மை வழிபாடாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்


Post a Comment

0 Comments